- Advertisement -
கேரள மாநிலத்தில் பரவும் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 2 பேர் அண்மையில் உயிரிழந்தனர். இதில், மேலும் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் இந்த வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க சுகாதாரத் துறை தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, தமிழ்நாடு – கேரள எல்லை மாவட்டங்களான கன்னியாகுமரி, தேனி, தென்காசி, நீலகிரி, கோவை, திருப்பூரில் காய்ச்சல் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது
- Advertisement -