- Advertisement -
கேரளாவில் நிபா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், கேரள எல்லை அருகே அமைந்துள்ள புதுச்சேரியின் மாஹே மாகாணத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, அந்த மாஹே பிராந்தியத்தில் உள்ள நிலமைகளை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் எனத் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்ட நிலையில், அங்குப் பாதுகாப்பு நடவடிக்கையாகப் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (செப்.15) முதல் 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -