- Advertisement -
ஒரு தசாப்தமாக தென்னிந்தியாவின் சென்சேஷனாக தொடர்ந்து வரும் இசையமைப்பாளர் அனிருத், தற்போது பான் இந்தியா படமான ‘ஜவான்’ படத்தின் மூலமாகப் பாலிவுட்டுக்கும் ஒரு மிகப் பெரிய வைப்ரேஷனை கொடுத்துள்ளார். அப்படத்தின் அனைத்து பாடல்களும் தற்போது இன்ஸ்டா ரீல்ஸ்களில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.
இந்நிலையில், நடிகை நயன்தாராவுடன் நடிகர் ஷாருக்கான் டூயட் பாடும் “சலேயா..” பாடலை, தற்போது பியானோவில் வாசித்துக்கொண்டே பாடும் காணொளியை அவர் X தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த காணொளி தற்போது ரசிகர்களால் இணையத்தில் வைரலாகி வருகிறது
- Advertisement -