- Advertisement -
பௌர்ணமி அன்று வீட்டில் விளக்கேற்றி லலிதா சகஸ்ரநாமம் சொல்லி வழிபடும்போது, வீடு, மனை முதலான செல்வங்களை வாங்குகிற பாக்கியத்தைக் கொடுக்கும் என்பது ஐதீகம். மேலும், மாதந்தோறும் வரும் ஒவ்வொரு பௌர்ணமியிலும் மாலையில் சந்திரன் தோன்றும் வேளையில் சர்க்கரைப் பொங்கல் நெய்வேத்தியம் செய்து ஆராதிப்பது விசேஷமானது, இதனால் தம்பதியர் இடையே ஒற்றுமை மேலோங்கும், செல்வம் பெருகும்.
அதைப்போல், பௌர்ணமி நாளில் அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபட வாழ்வில் இதுவரை பட்ட கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும், இந்நாளில் தேவி வழிபாடு செய்வது தீயசக்தியிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்
- Advertisement -