Wednesday, May 29, 2024 6:01 pm

எதிர்நீச்சல் நாடகத்தில் கடைசியாக ஒலித்த மாரிமுத்துவின் கம்பீரமான குரல்.!இதுவே கடைசி இனி இந்தக் குரலை கேட்க முடியுமா

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

எதிர்நீச்சல் கணவர் இறந்த பிறகும் தாலியை கைவிடாத நடிகர் மாரிமுத்துவின் மனைவிக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.நடிகர் மாரிமுத்து 2008-ல் கண்ணும் கண்ணும் படத்தை இயக்கி சுமார் 6 வருடங்களுக்கு பிறகு விமல், பிரசன்னா, ஓவியா, அனன்யா, இனியா நடித்த புலி வாள் படத்தையும் இயக்கினார். அதற்கு முன் மணிரத்னம், சீமான், எஸ்.ஜே.சூர்யா, வசந்த் என பல முன்னணி தமிழ் இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். எதிர்நீச்சல் தொடர் அவரை சமீபத்தில் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ஹிட் சீரியல் தான் ‘எதிர்நீச்சல்’. இந்த சீரியலானது நாளுக்கு நாள் விறுவிறுப்பான கதைக்களத்தைக் கொண்டு அதிரடித் திருப்பத்துடன் நகர்ந்த வண்ணம் இருக்கின்றது. இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.அதில் ரேணுகா இருக்கும் இடத்திற்கு வந்த கரிகாலனிடம் “வேவு பார்க்க சொல்லி உன்னை அனுப்பி விட்டாங்களா..?, இந்த மாதிரி வேலை எல்லாம் வச்சுக்கிட்டாய் என்று வச்சுக்கொள் முகரையில் மூக்கு, வாய், கண், காது எதுவுமே இருக்காது பார்த்துக்கொள், ஓடிப்போயிடு” என ரேணுகா மிரட்டுகின்றார். இதனையடுத்து கரிகாலனும் அந்த இடத்திலிருந்து நகர்ந்து செல்கின்றார்.

பின்னர் கரிகாலனைப் பார்த்து குணசேகரன் “கரிகாலா எனக்கும் சந்தேகமாய் தான்டா இருக்கு” எனக் கூறிவிட்டு குணசேகரன் வழக்கம்போல தனது தாய் விசாலாட்சியை ஏதோ திட்டிக் கொண்டிருக்கிறார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது.மேலும் அவரது சொந்த குரலில் கடைசியாக அந்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறமை ரசிகர்களை கண் கலங்க வைத்துள்ளது. மாரிமுத்து தனது அற்புதமான நடிப்பு மற்றும் தனித்துவமான ஸ்லாங்கின் மூலம் ஆண் மற்றும் பெண் என ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை கவர்ந்துள்ளார். ஆதி குணசேகரனின் முகபாவனை, தந்திரமான மற்றும் ஆக்ரோஷமான உடல் மொழியில் ‘இந்தம்மா ஏய்’ என்ற முத்திரை டயலாக்குடன் தமிழ் நாட்டில் தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. திடீர் மாரடைப்பால் அவர் மரணம் அடைந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டப்பிங் பேசும் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. டப்பிங்கின் போது நெஞ்சுவலி ஏற்பட்டதால், தானே காரை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றபோது மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.மாரிமுத்து கடைசியாக பகவான் கிருஷ்ணா இயக்கத்தில் நடித்தார், அதில் மாரிமுத்துவின் மரணம் என்று காட்சி அமைக்கப்பட்டது. மாரிமுத்து தனது சொந்த கடைசி அஞ்சலி போஸ்டர் முன்பு நின்று ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். அந்த செல்ஃபி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் கூட கடைசியில் வில்லன் வர்மனால் மாரிமுத்து கொல்லப்படுவார்.இந்நிலையில், கணவர் மாரிமுத்து கட்டிய தாலியை கைவிட மாரிமுத்துவின் மனைவி முடிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மாரிமுத்துவின் நினைவாக அதை எப்போதும் கழுத்தில் செயினாக அணிவேன் என்றாள். கணவர் மாரிமுத்து எப்போதும் தன்னுடன் இருக்கும் உணர்வை தாலி தரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது துணிச்சலான முடிவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்