- Advertisement -
இல்லத்தரசிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் முறைப்படி தொடங்கி வைத்தார். அதன்படி , அறிஞர் அண்ணாவின் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில், ஆண்கள் கல்லூரியில் நடைபெற்ற தொடக்க விழாவில் திட்டத்தைத் தொடங்கி வைத்த முதல்வர், அதற்கான ஏடிஎம் கார்டுகளை வழங்கினார்.
அதைப்போல், பிற மாவட்டங்களிலும் அந்தந்த பகுதி அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். இதன்மூலம், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் இல்லத்தரசிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறியது.
- Advertisement -