- Advertisement -
சூரியனைக் குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக ஆதித்தியா விண்கலம் கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி அனுப்பப்பட்டது. இந்நிலையில், இன்று இந்த விண்கலத்தைப் பூமியின் சுற்றுப்பாதையிலிருந்து 4 ஆவது முறையாக அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து, ஆதித்யா எல்-1 திட்ட இயக்குனர் நிகர் ஷாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அதில், அவர் “சூரியக் குடும்பம் உருவாகி ஏற்கனவே 450 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த குடும்பம் செயல்படத் தேவையான எரிபொருள், இன்னும் 500 கோடி ஆண்டுகளில் முடிவடைந்துவிடும். அதன்பின், சூரியன் விரிவடைந்து கொண்டே வந்து ஒட்டுமொத்த சூரியக் குடும்பத்தையும் அழித்துவிடும்.
இன்னும் 1000 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு, சூரியக் குடும்பமும், பூமி உள்ளிட்ட பிற கோல்கள் எதுவுமே இருக்காது” என்றார்
- Advertisement -