- Advertisement -
சூரியன் குறித்து ஆராய்வதற்காகக் கடந்த செப் .2ம் தேதி ‘ஆதித்யா எல்-1’ விண்கலம் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இந்நிலையில், ‘ஆதித்யா எல்-1’ விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 4வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
மேலும், அடுத்த அதிகரிப்பு வரும் செப் .19ம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது என ஏற்கனவே இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது. அதேசமயம், இந்த விண்கலம் வரும் ஆண்டு ஜனவரி மாதம் 4ம் தேதியன்று அதன் இலக்கை அடையும் எனத் தெரிவித்துள்ளனர்
- Advertisement -