- Advertisement -
தமிழகத்தில் வருகின்ற செப்.18ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனால், தமிழ்நாட்டில் சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு, சென்னையில் வசிக்கும் பலரும் தங்கள் சொந்த ஊர் செல்வர்.
இந்நிலையில், இவர்களின் வசதிக்காக, இன்று (செப் 15) இரவு 8 மணி முதல் 10 மணிவரை, 9 நிமிடங்களுக்குப் பதிலாக 6 நிமிடங்களுக்கு ஒரு ரயில் எனக் கூடுதலாக ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- Advertisement -