- Advertisement -
வியட்நாம் தலைநகர் ஹனோயில் 9 அடுக்குமாடிக் குடியிருப்பில் இன்று (செப் .13) காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ள மாடியிலிருந்து கீழே குதித்ததில் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். ஆனால், உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. அதேசமயம், அப்பகுதியில் மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- Advertisement -