- Advertisement -
நாடு முழுவதும் வருகின்ற செப்.18ம் தேதியன்று கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி அரசு பல்வேறு கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி, விநாயகர் சிலைகளை நிறுவ முன் அனுமதி, தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். சிலைகளைப் பிற வழிபாட்டுத் தலம், மருத்துவமனை, கல்வி நிலையத்துக்கு அருகில் வைக்கக் கூடாது.
மேலும், பிற மதத்தினரைப் புண்படுத்தும் வகையில் முழக்கமிடக் கூடாது. அதைப்போல், எந்தவித சர்ச்சையான பதாகைகள் வைக்கக் கூடாது, பட்டாசு வெடிக்கக் கூடாது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்
- Advertisement -