- Advertisement -
இலங்கையில் உள்ள கொழும்புவின் ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று (செப்.12) நடந்த ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோதின. இதில் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதால் இறுதிப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது.
இந்நிலையில், இந்தப் போட்டியின் நடுவே, தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தின் ‘நா ரெடி தான்…’ பாடல் ஒலிபரப்பப்பட்டது. இதற்கு, இந்திய ரசிகர்கள் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர். இதன் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது
- Advertisement -