- Advertisement -
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரம் நீட், ஜேஇஇ போன்ற அனைத்து விதமான நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களுக்குப் புகழ் பெற்றதாகும். இந்த மையத்தில் பயிற்சி பெற்று வந்த ஜார்கண்டை சேர்ந்த 16 வயது மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதன் மூலம், நடப்பாண்டில் மட்டும் அங்குத் தற்கொலை செய்த மாணவர்களின் எண்ணிக்கை 25ஐ நெருங்கியுள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.
- Advertisement -