- Advertisement -
காவிரி ஒழுங்காற்று குழுக் கூட்டத்தில், தமிழ்நாட்டுக்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடும்படி காவிரி மேலாண்மை ஆணையத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து, காவிரி நீர் பங்கீடு குறித்து கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம் முதல்வர் சித்தராமையா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் இன்று (செப். 13) பிற்பகல் 12.30 மணிக்கு நடைபெறுகிறது.
அதேசமயம், இந்த காவிரி நீர் விவகாரம் தொடர்பாகக் கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று இரவு அவசர ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில், டெல்லியில் நேற்று நடைபெற்ற காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழுக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு 5,000 கனஅடி நீர் திறந்துவிடப் பரிந்துரை செய்யப்பட்டதையடுத்து நேற்றிரவு கர்நாடக முதல்வர் அவசர ஆலோசனை
மேற்கொண்டார். இன்று கர்நாடகாவில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -