- Advertisement -
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 15 சீரிஸ் மொபைல்களை நேற்று (செப். 12) சர்வதேசச் சந்தையில் அறிமுக செய்தது. இதில் ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் என 4 மொபைல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இதனுடன் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மற்றும் அல்ட்ரா 2 என 2 புதிய ஸ்மார்ட் வாட்ச்களும் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், இந்த ஆப்பிள் வொண்டர்லஸ்ட் நிகழ்வில், Apple Watch Series 9, Watch Ultra 2 என்ற புதிய வாட்ச் மாடல்களில்,இனி வாட்சின் திரையைத் தொடாமலேயே, விரல்களை ‘டபுள் டாப்’ செய்தால், வாட்சில் உள்ள அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு போன் அழைப்புகளை எடுத்துப் பேசுதல் மற்றும் கட் செய்தல் போன்ற செயல்பாடுகள் போன்ற புதிய தொழில்நுட்பத்தை சர்வதேசச் சந்தையில் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
- Advertisement -