- Advertisement -
நடிகர் அருண் பாண்டியனின் மகள் நடிகை கீர்த்தி பாண்டியனுக்கும், நடிகர் அசோக் செல்வனுக்கும் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். இவர்களுக்கு அண்மையில் நிச்சயம் நடந்த நிலையில் இன்று (செப்.13) நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகேயுள்ள இட்டேரியில் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமண விழாவில் மணமக்கள் உடைய நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அதேசமயம், திருமண வரவேற்பு நிகழ்ச்சி விரைவில் சென்னையில் நடைபெறவுள்ளது. அதில், திரையுலக பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
- Advertisement -