- Advertisement -
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் முதல் மெய்தி, குக்கி இன பழங்குடியின மக்களிடையே ஏற்பட்ட அந்தஸ்து தொடர்பாக வன்முறை தற்போது வரை நீடித்து வருகிறது. இந்நிலையில், இந்த கலவரத்தில் இதுவரை 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதேசமயம், மணிப்பூரில் படிப்படியாக வன்முறைச் சம்பவங்கள் குறைவதாக ஒன்றிய அரசு கூறிவந்தது.
இந்நிலையில், இன்று (செப்.12) மீண்டும், மணிப்பூர் மாநிலம் காங்கோஃபி மாவட்டத்தில் குக்கி இனத்தைச் சேர்ந்த 3 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதால் தற்போது மீண்டும் வன்முறை வெடிக்கும் பரபரப்பு சூழல் நிலவுகிறது.
- Advertisement -