- Advertisement -
மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் நேற்று (செப் .11) இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது சுமார் ரிக்டர் அளவில் 5.1ஆகப் பதிவாகியுள்ளது என்றும், பூமிலிருந்து சுமார் 20 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர். அதேசமயம், இந்த நிலநடுக்கத்தால் அங்கு இதுவரை உயிர்ச்சேதமோ, பொருட் சேதமோ இதுவரை ஏற்படவில்லை
இதேபோல், கடந்த ஜூலை 21ம் தேதியன்று உக்ருல் மாவட்டத்தில் சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும், வங்கக் கடலில் நேற்று அதிகாலை 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -