- Advertisement -
நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று (செப் .12) காலை 10.30 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. அதன்படி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்னும் சற்று நேரத்தில் ஆஜராக இருந்த நிலையில் அப்பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டது .
ஆனால், அப்போது அவர் இன்னும் ஆஜராகவில்லை. இந்நிலையில் அக்கட்சியின் வழக்கறிஞர் பாசறை செயலர் சங்கர் தலைமையில் வழக்கறிஞர் குழுவினர், சீமான் ஆஜராகாதது குறித்துக் காவல் நிலையத்தில் விளக்கமளித்து வருகின்றனர்.
- Advertisement -