- Advertisement -
வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அது வலுவடைந்து மேற்கு – வடமேற்கு திசையில், தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரக்கூடும்’ எனக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது
- Advertisement -