- Advertisement -
கேரள மாநிலம் திருவனந்தபுரம் சர்கரா தேவி கோயிலில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஆயுதப் பயிற்சி வகுப்புகள் நடத்த கேரள உயர் நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது. மேலும், அங்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க காவல்துறைக்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், இதற்கு முன்னதாக அந்த கோயிலில் மேற்கொண்டுள்ள ஆயுதப் பயிற்சி உள்ளிட்ட எந்தப் பயிற்சி கூட்டமும் நடத்தக்கூடாது என திருவாங்கூர் தேவசம் போர்டு சுற்றறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது
- Advertisement -