- Advertisement -
ஆசியக் கோப்பை தொடரின் இன்றைய (செப். 12) சூப்பர் 4 சுற்றில் இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. மேலும், இந்தப் போட்டியில் இந்தியா வென்றால் இறுதிப்போட்டிக்குச் செல்லும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.
இந்நிலையில், இன்றும் (செப் .12) மழை குறுக்கிட வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஏனென்றால், இதற்கு முன் இந்தியா – பாகிஸ்தான் போட்டியின் போதும் மழை குறுக்கிட்டது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -