- Advertisement -
இந்த வருடம் 6 அணிகள் பங்குகொண்ட ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. தற்போது ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் நடந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது இந்திய அணி. அதன்படி, இந்த ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றுப் போட்டியில் 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தது.
மேலும், இந்த மழையால் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதலில் ஆடிய இந்தியா 356 ரன்கள் குவித்தது. பின்னர் இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி 128 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதேசமயம், இந்த ஆட்டத்தில் விராட் கோலி (122) ரன்களுடனும், கே.எல்.ராகுல் (111) ரன்களை விளாசி பாகிஸ்தான் பௌலர்களை பந்தாடினர். மேலும், இந்த போட்டியில் 122 ரன்களை எடுத்த விராட் கோலி ஆட்டநாயகன் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -