- Advertisement -
சென்னையில் நடந்த ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடியைத் தொடர்ந்து, அவர் மீது ரசிகர்களிடம் பல விமர்சனங்கள் வந்தன. இந்நிலையில் இதுகுறித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது கருத்தைக் கூறியுள்ளார்.
அதில், அவர் ” இந்த ‘மறக்குமா நெஞ்சம்’ நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளிலிருந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதைப் பார்க்கும்போது உண்மையிலே வருத்தமளிக்கிறது. ரசிகர்களின் பாதுகாப்பை ஏற்பாட்டாளர்கள் கவனித்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில், கலைஞர்களான நாங்கள் மேடையில் பர்ஃபார்ம் செய்கிறோம். இப்படித் திட்டமிடல், பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் நான் உட்பட அனைத்து கலைஞர்களும் பங்காற்றுவது அவசியம் என்பது இதிலிருந்து தெரிகிறது. கலைஞராக ஏ.ஆர்.ரஹ்மானுடன் துணை நிற்கிறேன்” என்றார்
- Advertisement -