- Advertisement -
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நேற்று (செப். 11) மர்மமான முறையில் திடீரென இருவர் மரணமடைந்திருப்பதாக சுகாதாரத்துறையினருக்கு மருத்துவமனை மூலமாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்கள் சடலத்தைக் கைப்பற்றி நடத்திய ஆய்வில், நிஃபா வைரஸ் தாக்குதலால் இறந்திருக்கக் கூடும் என தற்போது சந்தேகிக்கப்படுகிறது.
இதனால், அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனை நடத்தி வருகிறார். ஒருவேளை இந்த நோய் உறுதியானால், இது மேற்கொண்டு பரவாமல் இருக்க நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தனர்
- Advertisement -