- Advertisement -
தமிழகத்தில் உள்ள மகளிருக்கு மாதந்தோறும் ரூ .1000 வழங்கும் திட்டத்தின் இறுதிக்கட்ட ஆலோசனையைத் தமிழக முதல்வர் ஸ்டாலின் நடத்தினார். பின்னர், இந்த திட்டத்தின் மூலம் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் பயனடைவர் என்று சற்றுமுன் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், இந்த திட்டத்திற்கு 1.63 கோடி விண்ணப்பங்கள் வந்த நிலையில், 1.06 கோடி விண்ணப்பங்கள் தற்போது ஏற்கப்பட்டுள்ளது. சுமார் 57 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து, அப்படி நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு SMS மூலம் அதன் காரணம் அனுப்பவும், சந்தேகம் இருந்தால் விளக்கம் பெற வழிவகை செய்யவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை, பாராட்டுகளை மட்டுமே பெற்றுத்தரும் திட்டமாகச் செயல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தமிழக அரசின் மிகப்பெரிய திட்டம் என்றால் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தான் என்றும் இதன் தொடக்க விழா வருகின்ற செப்.15ல் காஞ்சிபுரத்தில் நடைபெறும் எனவும் கூறினார்.
- Advertisement -