- Advertisement -
குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டத்தை வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். இந்நிலையில், இது தொடர்பாக இன்று (செப். 11) முதல்வர் இறுதி ஆலோசனை நடத்த உள்ளார்.
இதில், இந்த திட்டத்தைச் செயல்படுத்தும் நடைமுறை உட்பட பல்வேறு விவரங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்த உரிமை திட்டம் பெறுபவர்களுக்கு பிரத்யேக ஏடிஎம் கார்டுகளை வழங்கவும் தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இத்திட்டத்தில் இதுவரை 1.63 கோடி பேர் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -