- Advertisement -
சில தினங்களுக்கு முன் தொடங்கிய அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (செப். 11) நடந்த ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் பிரபல வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிக், ரஷ்ய வீரர் டெனில் மெத்வதேவுடன் மோதினார்.
இதில் நோவக் 6-3, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் டெனில் மெத்வதேவை வீழ்த்தினார். இதன்மூலம், நோவக் ஜோகோவிக் தனது 24வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -