- Advertisement -
ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171வது படம் குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது. அதில், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
மேலும், ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஜெயிலரில் அனிருத்தின் இசை படத்திற்குப் பக்க பலமாக இருந்த நிலையில் இந்த படம் மீதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- Advertisement -