- Advertisement -
சென்னையில் நேற்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ கான்செர்ட் நிகழ்ச்சி பார்க்க வந்த பெரும்பாலான மக்கள் நிகழ்ச்சியை பார்க்காமலே திரும்பிச் சென்றுள்ளனர். ஏனென்றால், இங்கு ஒரு முறையான வழிமுறைகள் இல்லாததால், நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் கூட்டம் அலைமோதியுள்ளது.
இதனால், ரூ 5,000 டிக்கெட்டுகள் வாங்கிய பலர், “இது மிகவும் ஒரு மோசமான கான்செர்ட் நிகழ்ச்சி, பணம் வேஸ்ட் ” என வேதனையை வெளிப்படுத்திச் சென்றனர். அதேசமயம், இங்கு பார்க்கிங் வசதி, ஒழுங்குபடுத்துதல் என எந்த அடிப்படை ஏற்பாட்டையும் முறையாகச் செய்யாமல் நிகழ்ச்சி நடத்துபவர்கள் அலட்சியமாகச் செயல்பட்டதாக ரசிகர்கள் கொந்தளித்தனர்
- Advertisement -