- Advertisement -
சென்னையில் நேற்று (செப்.10) நடைபெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ கான்செர்ட் நிகழ்ச்சி, அங்கு வந்த ரசிகர்களிடையே கடும் கோபத்தை உள்ளாக்கியுள்ளது. ஏனென்றால், ரூ 500 முதல் ரூ .15000 எனப் பல ஆயிரம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்களால் நிகழ்ச்சியைப் பார்க்க முடியாமல் வீடு திரும்பியதாக சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.
மேலும், அந்த மைதானத்தில் சரியான வழிமுறை பின்பற்றாத காரணத்தினால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். சிலர் இந்த நிகழ்ச்சியின் டிக்கெட்டுகளை கிழித்து ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்
- Advertisement -