- Advertisement -
சென்னையில் நேற்று நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக, விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கத் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ்-க்கு தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இதைத் தொடர்ந்து, சென்னை அடுத்த பனையூரில், இசைநிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் ஆய்வு செய்த பின் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் பேட்டியளித்தார். அதில், அவர் ” இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது தீவிரமாக விசாரணை நடைபெற்று வருவதாக ” தெரிவித்தார். ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை பாயுமா..? என்ற கேள்வியும் எழுகிறது
- Advertisement -