சென்னையில் நேற்று நடைபெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர் .ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சிக்குப் பலர் டிக்கெட் வாங்கிவிட்டு மைதானத்திற்குள் நுழைய முடியாமல் திரும்பிச் சென்றதாகக் குற்றச்சாட்டை வைத்து வந்தனர். இந்நிலையில், இதுகுறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர் .ரஹ்மான் அவர்கள், ” மக்களே.. இந்த ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கிவிட்டு மைதானத்திற்குள் நுழைய முடியாமல் திரும்பிச் சென்றவர்கள், arr4chennai@btos.in என்ற இ-மெயில் முகவரிக்கு, உங்களின் டிக்கெட் நகலுடன் உங்கள் குறைகளை அனுப்பவும். உங்களது குறைகளை எங்கள் குழு நிவர்த்தி செய்யும்” என வேண்டுகோள் வைத்துள்ளார்.
மேலும், அவர் “என்னைச் சிலர் GOAT என அழைப்பார்கள்.. நாம் அனைவரும் விழித்துக்கொள்வதற்கு, இப்போது நானே பலி ஆடாக மாறுகிறேன். இங்கு உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு, சுற்றுலாத்துறையில் முன்னேற்றம், திறன் வாய்ந்த வகையில் கூட்டம் மற்றும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், விதிமுறைகளைப் பார்வையாளர்கள் ஒழுங்காகப் பின்பற்றுதல், குழந்தைகள் மற்றும் பெண்களுக்குப் பாதுகாப்பான அனுபவத்தை உருவாக்குதல், உள்நாட்டு மற்றும் சர்வதேச திறமைகளை ஊக்குவித்து, கலாச்சார வேட்கையைத் தூண்டுதல், உள்ளிட்ட விஷயங்கள் சென்னையில் நடந்திட வேண்டுகிறேன்” என்றார்.