- Advertisement -
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் தனது ஆட்சிக் காலத்தில் திறன் மேம்பாட்டுத் துறை நிதியில் ஊழல் செய்ததாகக் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவருக்கு அடுத்த வரும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் ராஜமுந்திரியில் உள்ள மத்தியச் சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார். இதற்கு அம்மாநிலத்தில் இவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சியினர் பந்த்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதன்படி, முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து ஆந்திர மாநிலம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தின் கீழ் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழகம் சற்றுமுன் அறிவித்துள்ளது. மேலும், தற்போது போலீஸ் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- Advertisement -