Saturday, April 13, 2024 6:41 pm

மறைந்த மாரிமுத்துவிடம் அன்றே உடனே இதை செய்ய்யுங்க அஜித் கூறிய யோசனை ! அதை மட்டும் கேட்டிருந்தால் இப்படியெல்லாம் நடந்துருக்குமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் நடித்த நடிகர், இயக்குனர் மாரிமுத்து வெள்ளிக்கிழமை காலமானார். 57 வயதான நடிகர் காலை 8:30 மணியளவில் மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. நடிகர் ஆதிமுத்து குணசேகரன் வேடத்தில் நடிக்கும் சன் டிவி சோப், எதிர் நீச்சல் படத்திற்கு டப்பிங் பேசுவதாக கூறப்பட்டது.

மாரிமுத்து 1999 ஆம் ஆண்டு அஜித்தின் வாலி திரைப்படத்தில் துணை வேடத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அஜீத், சுவலட்சுமி மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த ஆசை (1999) இல் இயக்குனர் வசந்துக்கு உதவினார். கண்ணும் கண்ணும் (2008) மூலம் இயக்குநராக அறிமுகமானார், இதில் பிரசன்னா மற்றும் உதயதாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படத்தை இயக்கியது மட்டுமின்றி கதை, திரைக்கதை, வசனம் எழுதி சிறு வேடத்தில் நடித்துள்ளார்.

இப்படி அவர் வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொடுத்து கொண்டிருக்கும் இந்த காலத்தில், தற்போது சென்னையில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய வீடையும் கட்டி அதில் சுமார் 90 சதவீத பணிகள் முடிந்து விரைவில் அந்த வீட்டிற்கு குடியேற இருந்த நிலையில் அந்த வீட்டிற்கு செல்வதற்கு முன்பே மாரடைப்பு காரணமாக பரிதாபமாக மாரிமுத்து உயிரிழந்தது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உதவி யாளராக மாரிமுத்து ராஜ்கிரனிடம் பணியாற்றிக் கொண்டிருந்த போது இயக்குனர் மணிரத்தினத்தின் படங்கள் மிக வெகுவாக அவரை கவர்ந்துள்ளது. இருந்தாலும் ஒரு கிராமத்து சாயல் பின்னணியில் உள்ள நாம் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் மணிரத்தினத்திலும் எப்படி உதவியாளராக சேர்வது, நம்மளை எல்லாம் அவர் எப்படி அவருடன் இணைத்துக் கொள்வார் என்கின்ற ஒரு கேள்வி மாரிமுத்து மனதில் தோன்றியது.

அந்த வகையில் மாரிமுத்து இந்த விஷயத்தை மணிரத்தினத்தை நேரில் சந்தித்து வாய்ப்பு கேட்ட போது தெரிவித்து விடுகிறார், அப்போது மாரிமுத்து சொன்னதை கேட்டு சிரித்த மணிரத்தினம், நீங்களும் ஒரு கிரியேட்டர், நானும் ஒரு கிரியேட்டர் அவ்வளவுதான் நீங்கள் வந்து என்னுடைய மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் வேலை செய்யுங்கள் என மணிரத்தினம் தெரிவிக்க, உடனே மெட்ராஸ் டல்கிஸ்ல் வேலையை தொடங்குகிறார்.

அதன் பின்பு மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் வசந்த் இயக்கத்தின் ஆசை படத்தில் அசோசியேட் டைரக்டராக பணிபுரிகிறார் மாரிமுத்து, அப்போது அவருக்கு நிறைய நண்பர்கள் கிடைக்கிறார்கள் அதில் ஆசை படத்துல் நடித்த அஜித்துடனும் நெருங்கி பழகும் வாய்ப்பு மாரிமுத்து கிடைக்கிறது. மாரிமுத்துவின் வேலைகளை பார்த்து வியப்படைந்த நடிகர் அஜித், அப்போது அசோசியேட் டைரக்டராக இருந்த மாரிமுத்துவை அழைத்து உங்களிடம் கதை ஏதாவது இருந்தால் என்னிடம் சொல்லுங்கள்.

உங்கள் இயக்கத்தில் நான் நடிக்கிறேன் என்று அஜித் தெரிவித்துள்ளார், அப்போது கடுமையாக போராட்டத்துக்கு பின்பு அசோசியாட் டைரக்டராக இருந்து வந்த மாரிமுத்துக்கு, நல்ல சம்பளம் அசோசியேட் டைரக்டராக வாங்கி கொண்டுள்ளார், இந்த நிலையில் திடீரென்று நான் கதை சொல்லி இயக்குனராகப் போகிறோம் என்றால் அசோசியேட் டைரக்டரின் வருமானம் நின்றுவிடும் என்கின்ற ஒரு அச்சத்தில் அஜித் நேரில் அழைத்து கதை சொல்லுங்க இணைந்து ஒரு படம் பண்ணுவோம் என்ற போதும் மாரிமுத்து தட்டி கழித்துள்ளார்.

ஒருவேளை மாரிமுத்து அன்று அஜித் நேரில் அழைத்து ஒரு கதையை தயார் செய்யுங்கள் என அஜித் அழைப்பை ஏற்று அவரை வைத்து மாரிமுத்து படம் இயக்கியிருந்தால் இன்று மிகப்பெரிய இயக்குனராக உருவாகி இருப்பார் மாரிமுத்து. இந்த நிலையில் எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் நடிகர் அஜித் வாலி படத்தில் கமிட்டாகிறார் , அப்போது வாலி படத்திற்கு ஒரு நல்ல அசோசியேட் அல்லது ஒரு கோ டைரக்டர் வேண்டும் என்ற போது.

எஸ் ஜே சூர்யா மாரிமுத்துவை முன்மொழிகிறார் உடனே அஜித் குமார் ஆமாம் மாரிமுத்து தானே அவர் எனக்கு நன்றாகத் தெரியும் ஆசை படத்திலே அவருடைய வேலையை பார்த்து இருக்கிறேன், நல்ல வேலை செய்யக் கூடியவர் தான், உடனே அவரை உங்களுடன் இணைத்துக் கொள்ளுங்கள் என அஜித் எஸ் ஜே சூர்யாவிடம் சொல்ல , வாலி படத்திலும் கோ டைரக்டராக பணியாற்றினார் மாரிமுத்து.

இதனைத் தொடர்ந்து வாலி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததும் அந்தப் படத்தில் பணியாற்றிய கோ டைரக்டர் அனைவருக்கும் ஒவ்வொருவருக்கும் பைக் பரிசளித்தார் அஜித். அப்போது மாரிமுத்துக்கும் பைக் பரிசாக அஜித் கொடுத்துள்ளார். அந்த வகையில் மாரிமுத்துவுக்கும் அஜித்துக்கும் நெருக்கிய பழக்கம் இருந்தும் , மேலும் அஜித்தை இயக்கும் வாய்ப்பு மாரிமுத்துவுக்கு கிடைத்தும் அதை சரியாக பயன்படுத்த தவறிவிட்டார் மாரிமுத்து. நடிகர் மாரிமுத்து கடந்த 8-ம் தேதி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். தொடர்ந்து நேற்று ( செப்.9-ம் தேதி) அவருடைய சொந்த ஊரில் அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது.

இது குறித்து அவருடைய சகோதரர் நடித்த பேட்டியில் எங்கள் வழக்கப்படி ஒருவர் இறந்து விட்டால் அவரை புதைப்பது தான் வழக்கம்.

ஆனால் மாரிமுத்துவை எரித்து விட்டோம். மேலும் ஒருவரை புதைத்தால் அந்த இடத்தில் ஒரு மரம் நட்டு அதை மரத்தை நாங்கள் கவனித்து வருவோம்.

மாரிமுத்துவின் நினைவுகளே எங்களுக்கு வேண்டாம். அது எங்களை நொறுக்குகிறது. அவருடைய நினைவே வேண்டாம் என்று தான் அவரை எரித்து விட்டோம்.

எங்களுடன் அவர் தற்போது இல்லை என்பது எங்களுக்கு மிகப்பெரிய வேதனையாக இருக்கிறது. என்ன செய்வது என்று யோசிக்கும் பொழுது இதனை கடந்து விட்டு செல்வது தான் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது.பின்னர் அவர் யுத்தம் செய் (2011), கொடி (2016), பைரவா (2017), கடைக்குட்டி சிங்கம் (2018), சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் (2021) மற்றும் இந்தி திரைப்படம் உட்பட பல தமிழ் படங்களில் துணை வேடங்களில் நடித்தார். அத்ராங்கி ரே (2021), மற்றவற்றுடன்.

அவர் 2014 இல் புலிவால், பிரசன்னா நடித்த த்ரில்லர் திரைப்படம் மற்றும் வெமல் நாயகனாக நடித்தார். இப்படம் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த தென் கொரிய திரைப்படமான Handphone ஐ தழுவி எடுக்கப்பட்ட 2011 ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான Chaappa Kurishu படத்தின் ரீமேக் ஆகும்.

கபாலி புகழ் விஸ்வந்தின் அப்பாவாக மாரிமுத்து நடித்துள்ள இந்த வாரம் வெளியான சிவப்பு சந்தன மரம் தான் மாரிமுத்துவின் லேட்டஸ்ட் ரிலீஸ். நடிகர் இந்தியன் 2 படத்திலும் நடித்துள்ளார், இது அவரது கடைசி படம் என்று கூறப்படுகிறது.

நடிகரின் இறுதி சடங்குகள் மதுரையில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. அவருக்கு மனைவி, மகள், மகன் உள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்