Wednesday, October 4, 2023 6:43 am

அஜித் இல்லனா மார்க் ஆண்டனி படம் இல்ல ! மார்க் ஆண்டனிக்கு பின்னால் இருக்கும் உண்மையை உடைத்த ஆதிக் ரவிச்சந்திரன்

spot_img

தொடர்புடைய கதைகள்

ராதா ரவியின் கடைசி தோட்டா படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இதோ !

நடிகர் ராதாரவி நடிப்பில் உருவாகி வரும் 'கடைசி தோட்டா' படத்தின் செகண்ட்...

துபாயில் விஜய்யின் ‘ரஞ்சிதமே ‘ பாடலுக்கு நடனமாடிய ராஷ்மிகா மாந்தன்னா !

ராஷ்மிகா மந்தனா உண்மையிலேயே இந்திய திரையுலகில் மிகவும் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவர்....

மாதகம் பார்ட் 2 படத்தின் ரீலிஸ் தேதி இதோ !

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் சமீபத்திய தமிழ் க்ரைம்-த்ரில்லர் தொடரான மாதகம், ஆகஸ்ட் 18...

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தமிழக அரசுக்கு புதிய கோரிக்கைகள் !

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என்பது ஒரு தயாரிப்பாளர் சங்கம் ஆகும்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

விஷால், திரைப்படத் தயாரிப்பாளர்-நடிகர் எஸ் ஜே சூர்யாவுடன் இரட்டை வேடங்களில் திரை இடத்தைப் பகிர்ந்து கொண்ட மார்க் ஆண்டனியுடன் திரையரங்குகளுக்குள் நுழையத் தயாராகிவிட்டார். த்ரிஷா இல்லனா நயன்தாரா (2015) புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் மூலம் தயாரிப்பாளர் எஸ்.வினோத் குமாரின் மினி ஸ்டுடியோஸ் பேனரின் கீழ் இயக்கப்பட்டு, தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, வரவிருக்கும் காலப்பயண அறிவியல் புனைகதை பொழுதுபோக்கு திரைப்படம் செப்டம்பர் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் திறக்கப்பட உள்ளது. 15 விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு. ஏற்கனவே விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடித்துள்ள மிகப்பெரிய சலசலப்பில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மார்க் ஆண்டனி

இந்தப் படத்தின் இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன் ஏற்கனவே த்ரிஷா இல்லைனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை எடுத்திருக்கிறார். ஆனால் அந்த இரு படங்களுமே எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. மேலும் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.இரண்டு படங்களுமே சரியாக போகவில்லை என்றாலும் இந்த ஒரு பெரிய கூட்டணியை வைத்து எந்த தைரியத்தில் மீண்டும் களத்திற்குள் இறங்கியிருக்கிறார் என்று விசாரித்தால் அதற்கு பின்னனியில் இருந்து தூண்டுகோலாக இருந்தது அஜித்தான் என்று தெரியவந்தது.

ஜெய்லர் படம் எனக்கு கிடைத்ததற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது தளபதிதான் என்று நெல்சன் ஒரு பக்கம், ஜவான் படத்தின் வாய்ப்பு தளபதி அண்ணனாலதான் எனக்கு கிடைத்தது என்று அட்லீ ஒருபக்கம் விஜயையே புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள்.அதற்கு மத்தியில் இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது என்றால் அது அஜித் சாராலதான் என மார்க் ஆண்டனி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறினார். பக்கா அஜித் வெறியனான ஆதிக் ரவிச்சந்திரன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடிக்கும் போது அஜித்துடன் பேசும் வாய்ப்பு கிடைத்ததாம்.

அப்போது அஜித் ஆதிக்கிடம் ‘எப்பவுமே சின்ன பொருளுக்கு ஆசைப்படக் கூடாது என்றும் பெரிய பொருள் மீதுதான் ஆசை அதிகமாக இருக்க வேண்டும்’ என்று கூறினாராம். அப்போது வரைக்கும் கிடைக்கிற வாய்ப்பை வைத்துக் கொண்டு சந்தோஷப்பட்டுக் கொள்வோம் என்றுதான் ஆதிக் இருந்தாராம்.அஜித்தின் இந்த அறிவுரைக்கு பிறகு ஆதிக்கின் மனதில் ஏதோ ஒன்று துளைத்துக் கொண்டே இருக்க பெருசா எதாவது பண்ண வேண்டும் என்ற ஆசை பிறந்ததாம். அதன் விளைவுதான் இந்த மார்க் ஆண்டனி திரைப்படம். இந்தப் படத்தின் ரிசல்ட் எப்படி இருந்தாலும் அதன் முழு கிரெடிட் அஜித் சாருக்குத்தான் என ஆதிக் ரவிச்சந்திரன் கூறினார்.

விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவைச் சுற்றி நடக்கும் கதை மற்றும் அவர்கள் சித்தரிக்கும் பல்வேறு கதாபாத்திரங்களில், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் என்ன சமைத்திருக்கிறார் என்பதைக் காண்பது சுவாரஸ்யமாக இருக்கும். நீட்டிக்கப்பட்ட துணை நடிகர்கள் மற்றும் CGI சில்க் ஸ்மிதாவின் கேமியோவுடன், ரசிகர்கள் படத்தை விரைவில் திரையரங்குகளில் பார்க்க ஏராளமான காரணங்கள் இருக்கும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்