- Advertisement -
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகத் தமிழ்நாட்டில் உள்ள கோவை, நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மேற்குத் தொடர்ச்சி மாவட்டங்களில் இன்றும் (செப். 8), நாளையும் (செப் .9) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழ்நாட்டுக் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், இன்று முதல் 3 நாட்கள் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்குச் சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது
- Advertisement -