- Advertisement -
ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு உள்ள பெரியார் சிலையை இடித்துத் தள்ள வேண்டும் என ஒருவர் முகநூலில் பதிவிட்டுள்ளார். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பெரியார் சிலைக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
மேலும், இதைப் பதிவிட்டது யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து, திருவாடானை பகுதியைச் சேர்ந்த பரணி என்பவரைக் கைது செய்யக் காவலர்கள் விரைந்துள்ளனர்.
- Advertisement -