- Advertisement -
சென்னையில் தற்போது சில நாட்களாக மக்களிடையே ‘மெட்ராஸ் ஐ’ பரவல் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர். இது ஒரு தொற்று நோய். மழைக்காலம் வந்துவிட்டாலே இதன் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கும் என்றனர்.
ஆகவே, இந்த தொற்று நோய்ப் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க அதிகளவு வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்த கேரட், பப்பாளி, சர்க்கரை வள்ளிக் கிழங்கு ஆகியவற்றைச் சாப்பிடலாம் என மருத்துவர்கள் மக்களுக்குப் பரிந்துரைக்கின்றனர்.
- Advertisement -