- Advertisement -
நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுப் பெருவிழா கடந்த ஆக. 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாலை நடைபெற்ற பெரிய தேர்ப் பவனி, ஆலயத்தைச் சுற்றி ஊர்வலமாகச் சென்று மீண்டும் பேராலய முகப்பை வந்தடைந்தது. பக்தர்கள் ‘மரியே வாழ்க, மாதாவே வாழ்க, பசிலிக்கா பசிலிக்கா’ எனப் பக்திப் பரவசத்துடன் முழக்கமிட்டனர்.
இதையடுத்து, இந்த ஆண்டு விழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. ஆகவே, நாகை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் செப் . 23ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது
- Advertisement -