- Advertisement -
டெல்லியில் நாளை (செப்.9) முதல் ஜி20 மாநாடு தொடங்குகிறது. இதன் காரணமாக, இந்த மாநாட்டில் பங்குகொள்வதற்காகப் பல உலகநாடு தலைவர்கள் வருகை தருகின்றனர். அப்படி வருகை தரும் உலக தலைவருக்களுக்கு சிறந்த உணவு தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
அந்த வகையில், உலக தலைவர்களாக அங்குச் சைவ உணவுகளுக்குக் குறிப்பாகத் தினை உணவுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை தாஜ் உணவக நிர்வாகம் இந்த உணவுகளைத் தயார் செய்கிறது. மேலும், இங்கு 120க்கும் மேற்பட்டோர் சேர்ந்து 500 வகை உணவுகளைத் தயாரிக்கின்றனர். அதில், தென் இந்திய மசாலா தோசை, பெங்காலி ரசகுல்லா, சிறப்புத் தினை தாலி உள்ளிட்டவை இடம்பெறவுள்ளன.
- Advertisement -