- Advertisement -
கொய்யா,ஆப்பிள்,ஸ்ட்ராபெர்ரி, வாழைப் பழம்,திராட்சை, தர்பூசணி போன்ற பழங்கள் உடல் எடையைக் குறைக்கும் பழங்கள் ஆகும். அதன்படி, எல்லா காலங்களிலும் கிடைக்கும் கொய்யாப் பழம் செரிமான கோளாறை நீக்கும்.நார்ச்சத்து அதிகம் உள்ள இப்பழத்தைச் சாப்பிட்டால் உடல் எடை தானாகக் குறையும். இதயத்திற்கு நன்மை தரும் ஆப்பிள் பழம். இதில் நார்ச்சத்து மற்றும் பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளது. உடல் எடையைக் குறைக்க ஆப்பிள் பழம் சாப்பிடலாம்.
அதைப்போல், வாழைப் பழம் சாப்பிட்டால் வயிறு நிறைவாக இருக்கும். பசி எடுக்காது. உடல் எடையைக் குறைக்க வாழைப் பழம் சாப்பிடலாம். ஸ்ட்ராபெர்ரி பழத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். இப்பழம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும். இதனால் உடல் எடை குறையும். உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும்,அதே நேரத்தில் உடல் எடையையும் குறைக்கும் திராட்சைப் பழம். தர்பூசணி பழத்தில், நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் சாப்பிடும் போது பசி உணர்வு தானாக அடங்கும். அவ்வளவு வேகமாகப் பசி எடுக்காது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் தாராளமாக தர்பூசணி பழத்தைச் சாப்பிடலாம்.
- Advertisement -