- Advertisement -
பிரேசில் நாட்டில் பெய்துவரும் கனமழை மற்றும் புயல் காரணமாக இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக மியூகம், லஜியாடோ, ரோகா சேல்ஸ் உள்ளிட்ட மாகாணங்களில் புயலின் தாக்கத்தால் அதிக பாதிப்புகள் நேர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், இனி எதிர்வரும் நாட்களில் இந்த கனமழை நீடிக்கும் எனப் பிரேசில் நாட்டின் வானிலை மையம் அறிவித்துள்ளதால் தற்போது அங்குள்ள அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
- Advertisement -