- Advertisement -
இந்தாண்டு நடைபெற்று வருகின்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில், பாகிஸ்தானில் நடைபெற்ற ஆட்டத்தைக் காண பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி அண்மையில் சென்றிருந்தார். பின்னர், நாடு திரும்பிய பிசிசிஐ தலைவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, அவர் “ பாகிஸ்தானில் எங்களுக்கு ராஜ மரியாதை கிடைத்தது, நல்ல விருந்தோம்பல் அளித்ததுடன் எங்களைச் சிறப்பாக நடத்தினர். பாகிஸ்தானுடன் நேரடி இருநாட்டுத் தொடரில் மீண்டும் ஆடுவது எப்போது என்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் தற்போது தீர்மானிக்க முடியாது. இந்த விஷயத்தில் ஒன்றிய அரசுதான் முடிவு எடுக்க முடியும்” எனக் கூறி நெகிழ்ந்துள்ளார்
- Advertisement -