- Advertisement -
ஒருவரது வீட்டில் பள்ளிகள் சத்தமிட்டுக் கொண்டிருந்தால் அங்குக் குலதெய்வம் இருப்பதை அறிந்து கொள்ளலாம் குலதெய்வ கோயிலிலிருந்து கொண்டு வரும் எலுமிச்சம்பழத்தை சிலர் பணம் வைக்கும் டப்பா அல்லது பூஜை அறையில் வைத்திருப்பார்கள் சில நாட்கள் செல்ல செல்ல அது காய்ந்து போக வேண்டுமே தவிர அழுகிப்போகக் கூடாது. எலுமிச்சம்பழம் காய்ந்து போனால் இறைசக்தி நிறைந்துள்ளதாக அர்த்தம் அழுகிப் போனால் நம் வீட்டில் இறை சக்தி இல்லை என்று அர்த்தம்
உங்கள் வீட்டில் சம்பந்தமே இல்லாமல் திடீரென விபூதி மனம், சந்தன வாசனை, அபிஷேக வாசனை, சுருட்டு வாசனை, பிராந்தி வாசனை, மல்லிகை பூ மனம் போன்றவை திடீரென நம்மை உணர வைக்கும் இவ்வாறு உங்கள் குலதெய்வத்திற்குப் படைக்கும் ஒரு சில பொருட்களின் அறிகுறியாக இந்த வாசனைகள் இருக்கலாம் அப்படி இருந்தால் உங்கள் வீட்டில் குலதெய்வம் வாசம் செய்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்
- Advertisement -