- Advertisement -
இந்தாண்டு இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் நேற்று (செப்.6) நடைபெற்றது. இப்போட்டியில், பாகிஸ்தான்-வங்கதேசம் அணிகள் விளையாடியது.
இதில் முதலில் பேட் செய்த வங்கதேசம் அணி 38.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 193 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் எளிய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி , 39.3 ஓவர்களில் 194 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், 17 ரன்களுடன் வெளியேறியதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்
- Advertisement -