- Advertisement -
உலக புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரரான ரொனால்டோ Ballon d’Or விருதுக்குத் தேர்வாகாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2023ம் ஆண்டுக்கான Ballon dOr விருது பட்டியலில் மெஸ்ஸி உள்ளிட்ட 30 பேர் இடம்பிடித்துள்ள நிலையில், ரொனால்டோ இடம்பெறவில்லை.
இதுகுறித்து அவரது ரசிகர்கள், இதுவரை 20 முறை தேர்ந்தெடுக்கப்பட்டு 5 முறை விருதைப் பெற்ற ரொனால்டோ தேர்ந்தெடுக்கப்படாமல் போனது எப்படி? எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம் கால்பந்து உலகின் மிக உயரிய விருதான ‘Ballon d’Or’ விருதுக்கு அதிகம் முறை பரிந்துரைக்கப்பட்ட வீரரானார் மெஸ்ஸி. இதில் 7 முறை இவ்விருதையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
- Advertisement -