- Advertisement -
தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர்” சனாதனம் குறித்த எனது பேச்சை, இனப்படுகொலை செய்யத் தூண்டினேன் எனத் திரித்து, அதையே மையமாக வைத்து அமித்ஷா போன்ற ஒன்றிய அமைச்சர்கள், பாஜக முதலமைச்சர்கள் என் மீது நடவடிக்கை கோரினர் நியாயமாகப் பார்த்தால் மதிப்புமிக்க பொறுப்பிலிருந்து அவதூறு பரப்பும் இவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர வேண்டும். ஆனால், இவர்களுக்குப் பிழைப்பே இதுதான் என்பதால், ‘பிழைத்துப் போகட்டும்’ என்று விட்டுவிட்டேன் ” எனக் கூறியுள்ளார்.
மேலும், அவர் ” ‘சும்மா இருக்கிறதுன்னா சும்மாவா’ என வடிவேலு நடித்த கதாபாத்திரத்துடன் போட்டிப் போடும் அளவுக்குப் பிரதமர் மோடி கடந்த 9 ஆண்டுகளாக சும்மா இருந்துள்ளார் இடையிடையே பணத்தை மதிப்பிழக்கச் செய்வது, குடிசைகளை மறைத்து சுவர் எழுப்புவது, செங்கோல் நடுவது, நாட்டின் பெயரை மாற்றி விளையாடுவது, எல்லையில் வெள்ளைக்கொடிக்கு வேலை வைப்பது என 23ம் புலிகேசி கதாபாத்திரத்துடன் போட்டிபோட்டு நகைச்சுவையும் செய்கிறார்” என இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
- Advertisement -