- Advertisement -
இன்று (செப் .7) தனது 72வது பிறந்தநாளைக் கொண்டாடும் மலையாள நடிகர் மம்மூட்டிக்குப் பல திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மம்மூட்டியின் மகனான நடிகர் துல்கர் சல்மான் அவர்கள், நான் சிறுவனாக இருந்தபோது, பெரியவனானால் உங்களைப் போல இருக்க வேண்டும் என விரும்பினேன். நான் கேமராவுக்கு முன் முதல்முறையாக நின்றபோது, உங்களைப் போன்ற நடிகராக வேண்டும் என விரும்பினேன்” என்றார்.
மேலும், அவர் ”தற்போது நான் தந்தையானபோது, உங்களைப் போலவே இருக்க ஆசைப்பட்டேன். என்றாவது ஒருநாள் உங்களில் பாதியாக இருப்பேன் என் நம்புகிறேன் அப்பா. பிறந்தநாள் வாழ்த்துகள்” என மம்மூட்டி பிறந்தநாளையொட்டி வாழ்த்து தெரிவித்த மகன் துல்கர் சல்மான்
- Advertisement -