- Advertisement -
நிலவை ஆராய்வதற்கு “ஸ்லிம்” என்ற விண்கலத்தை ஜப்பான் நாடு இன்று (செப் .7) வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியுள்ளது. இந்நிலையில், தற்போது இந்தியாவைத் தொடர்ந்து நிலவிற்கு விண்கலம் அனுப்பிய 5-வது நாடு ஜப்பான் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
மேலும், இந்த ஸ்லிம் விண்கலம் நிலவில் தரையிறங்கி அங்குள்ள பாறைகளை ஆராய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அடுத்த 4 முதல் 6 மாதங்களில் நிலவை இந்த ஸ்லிம் விண்கலம் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -